"தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நேற்றைய ஸ்பெயின் மாநாடு அமைந்தது" - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
தமிழ்நாட்டில் மேலும் பல குறிப்பிடத்தக்க முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நேற்றைய மாநாடு அமைந்தது என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,
தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமையையும், தற்போது நிலவும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலையும் ஸ்பெயின் நாட்டின் தொழில்துறையினருக்கும் அங்கு செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களுக்கும் எடுத்துரைத்தேன்.
எனது ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், சிங்கப்பூர் பயணங்கள், இம்மாதம் நாம் நடத்திய உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு ஆகியவற்றின் வாயிலாகத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கியுள்ள, தொடங்கவுள்ள முன்னணி நிறுவனங்களின் பெயர்களையும் பட்டியலிட்டேன்.
நல்லாட்சி, அமைதி, திறன்மிகு மனிதவளம், எல்லையற்ற வாய்ப்புகளைக் கொண்ட தமிழ்நாட்டில் மேலும் பல குறிப்பிடத்தக்க முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நேற்றைய மாநாடு அமைந்தது. என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story