யோகா பயிற்சி


யோகா பயிற்சி
x

யோகா பயிற்சி நடந்தது.

கரூர்

நொய்யல் பகுதியில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி மற்றும் யோகா குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஹோமியோபதி மருத்துவர் சாந்தி தலைமையில் சுகாதார குழுவினர் கலந்து கொண்டு, முகாமில் கலந்து கொண்ட பெண்கள் மற்றும் ஆண்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளித்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு யோகா பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் நொய்யல் சுற்றுவட்டார பகுதி சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.


Related Tags :
Next Story