சர்வதேச யோகா தினத்துக்கான கவுண்ட்டவுனை முன்னிட்டு 'யோகா நிகழ்ச்சி'


சர்வதேச யோகா தினத்துக்கான கவுண்ட்டவுனை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி
x
தினத்தந்தி 16 Jun 2022 3:27 AM GMT (Updated: 16 Jun 2022 3:50 AM GMT)

சர்வதேச யோகா தினத்துக்கான கவுண்ட்டவுனை முன்னிட்டு 'யோகா நிகழ்ச்சி' தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் நடந்தது.

சென்னை

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்த ஆண்டுக்கான சர்வதேச யோகா தினத்துக்கான கவுண்ட்டவுனை முன்னிட்டு தெற்கு ரெயில்வேயின் தலைமை அலுவலகத்தில் உள்ள பாரம்பரிய வளாகம் முன்பு சிறப்பு 'யோகா நிகழ்ச்சி' நடைபெற்றது. இதில் பொது மேலாளர் பி.ஜி.மல்யா மற்றும் துறை சார்ந்த தலைமை அதிகாரிகள், ரெயில்வே பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரெயில்வேயில் உள்ள யோகா நிபுணர்கள் மற்றும் அயூர்வேத அலோசகர்களின் உதவியோடு யோகா பயிற்சிகள் மற்றும் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

நிகழச்சியில் பொது மேலாளர் பி.ஜி.மல்யா பேசியதாவது:-

நம் உடலை கட்டுக்கோப்பாக வைக்க, யோகாவை நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாக கடைபிடிக்க வேண்டும். தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க யோக சுவாச பயிற்சிகளை மேற்கொண்ட நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் இருந்ததில் யோகா முக்கிய பங்கு வகித்தது.

இந்தியாவில் சுற்றுலாவுக்காக பிரபலப்படுத்தும் வகையில் 75 பாரம்பரிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த வகையான நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் நூற்றாண்டு விழாவை கண்ட தெற்கு ரெயில்வேயின் பொது மேலாளர் கட்டிடமும் ஒன்றாகும். மேலும் யோகா வழியாக பயன்பெறும் வகையில் பல்வேறு கருத்துகள் மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story