தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான யோகா பயிற்சி பட்டறை


தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான யோகா பயிற்சி பட்டறை
x

தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான யோகா பயிற்சி பட்டறை நடைபெற்றது.

திருச்சி

பாரதிதாசன் பல்கலைக்கழக கணினி அறிவியல் பள்ளி மற்றும் தொழில் நுட்ப பூங்கா ஆகியவை இணைந்து யோகாவிற்கான சிறப்பு பயிற்சி பட்டறை காஜாமலை வளாகத்தில் நடத்தினர். தற்கால தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்காக நடத்தப்பட்ட இந்த பயிற்சி பட்டறையை பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம் தொடங்கி வைத்து பேசும்போது, யோகா கற்றுக் கொள்வதால் ஒருங்கிணைந்த மனிதத்துவம் மேம்படுகிறது, அதனால் இளம் தலைமுறையினர் பயன்பெற வேண்டும், யோகா இந்திய நாட்டின் பொக்கிஷம், இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் மறைந்து போன இந்திய பெருமையை மீட்டெடுக்க முடியும் என்றார். ஆழியார் அறிவு திருக்கோயில் மனவளக்கலை துணை பேராசிரியை ரேணுகாதேவி ஆசனங்கள், தியானம் மற்றும் மூச்சு பயிற்சியினை கற்றுக் கொடுத்தார். முன்னதாக பல்கலைக்கழக மூத்த பேராசிரியரும், துறை இயக்குனருமான கோபிநாத் கணபதி வரவேற்று வாழ்த்துரை வழங்கினார். முடிவில் உதவி பேராசிரியர் முத்துராமலிங்கம் நன்றி கூறினார்.


Next Story