சர்வதேச யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி திருப்பூர் மாவட்ட மாணவ-மாணவிகள் வெற்றி


சர்வதேச யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி திருப்பூர் மாவட்ட மாணவ-மாணவிகள் வெற்றி
x
தினத்தந்தி 14 Jun 2023 10:42 PM IST (Updated: 15 Jun 2023 4:20 PM IST)
t-max-icont-min-icon

சர்வதேச யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் நடைபெற்றது.

திருப்பூர்


சர்வதேச யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், இலங்கை, தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா, துபாய், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். காமன் ஈவென்ட் போட்டி பிரிவில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கிரிவாசன் 13 வயது முதல் 16 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும், தருண் 6 வயது முதல் 8 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதல் இடத்தையும், சஷ்டிகா 9 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடத்தையும், ரம்யா 26 வயது முதல் 35 வயதுக்குட்பட்டோர் பிரிவு மற்றும் தேவி 36 வயது முதல் 40 வயது வரைக்கு உட்பட்டோர் பிரிவில் 2-வது இடமும் பெற்றனர்.

ரிதமிக் ஈவென்ட் போட்டியில் ஜெயப்ரீத்தா 17 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதல் இடத்தையும், சாம்பியன்ஷிப் ஈவெண்ட் போட்டியில் திஷாந்த் 9 வயது முதல் 12 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும், கிரஷிகா 13 வயது முதல் 16 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் முதலிடம் பெற்று வென்றனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். யோகா ஆசிரியர் ஜாவித்தை கலெக்டர் பாராட்டினார்.


Next Story