பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடத்துக்கு 6-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடத்துக்கு 6-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 2 July 2022 11:51 PM IST (Updated: 4 July 2022 8:58 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடத்துக்கு 6-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-23-ம் கல்வியாண்டில் 1.6.2022 நிலவரப்படி காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்டக்கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இது சார்பான காலிப்பணியிட விவரங்கள் முதன்மை கல்வி, மாவட்ட கல்வி, வட்டார கல்வி அலுவலகங்களின் தகவல் பலகையில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வருகிற 6-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். குறித்த நேரத்திற்குப் பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. தகவல் பலகையில் வெளியிடப்படும் காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது. விண்ணப்பங்களை அரியலூர் கல்வி மாவட்டத்துக்கு ariyalurdeo@gmail.com, உடையார்பாளையம் கல்வி மாவட்டத்துக்கு deoudpm@gmail.com, செந்துறை கல்வி மாவட்டத்துக்கு senduraideo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பலாம்.

இந்த தகவல் அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story