தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
x

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர் ப.மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் வருகிற 9 -ந் தேதி முதல் 13-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வெப் கேமரா புகைப்படம் மூலம் விண்ணப்பங்களை தேர்வு கட்டணத்துடன் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். தேர்வு கட்டணம் மற்றும் விண்ணப்ப பதிவேற்றத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்காத தேர்வர்கள் அதற்குரிய கூடுதல் கட்டணம் செலுத்தி சிறப்பு அனுமதி திட்டத்தில் 15, 16-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Next Story