தடையின்மை சான்று பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்


தடையின்மை சான்று பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
x

பட்டாசு கடை உரிமம், பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க தடையின்மை சான்று பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

சிவகங்கை


சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் நிரந்தர பட்டாசுக்கடை உரிமம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைப்பதற்கான தடையின்மைச்சான்று பெறுவதற்கு கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பம் செய்ததின் பேரில் தடையின்மை சான்று வழங்கப்பட்டு வந்தது. தற்போது அரசின் உத்தரவின் படி நிரந்தர பட்டாசுக்கடை உரிமம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய சேவைகளுக்கான தடையின்மைச்சான்று பெற்றிட, தமிழ்நாடு ஒற்றைச் சாளர இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் காலங்களில் சிவகங்கை மாவட்டத்தில் நிரந்தர பட்டாசுக்கடை உரிமம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய சேவைகளுக்கான தடையின்மைச்சான்று பெற்றிட தமிழ்நாடு ஒற்றைச் சாளர இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

1 More update

Related Tags :
Next Story