லியோ படத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்


லியோ படத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்
x
தினத்தந்தி 15 Oct 2023 6:45 PM GMT (Updated: 15 Oct 2023 6:47 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் லியோ படத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் கூறினார்.

திருவாரூர்


திருவாரூர் மாவட்டத்தில் லியோ படத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் கூறினார்.

சிறப்பு காட்சிகள்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை அரசு முதன்மை செயலர் உள்த்துறை கடிதத்தில், லியோ திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிகள் 19-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை (அதிகபட்சம் 5 காட்சிகள்) காலை 9 மணி முதல் இரவு 1.30 மணி வரை திரையிடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, லியோ திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிகள் திரையிடப்படும் நாட்களில் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களின் தகுந்த பாதுகாப்பையும் உறுதி செய்திட வேண்டும். முறையான போக்குவரத்து மற்றும் பார்கிங் வசதிகள் ஏற்பாடுகள் செய்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

புகார் தெரிவிக்கலாம்

அதிக கட்டணம் வசூல் செய்தல் மற்றும் உணவு மற்றும் தின்பண்டங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தவிர்த்திட வேண்டும் என அறிவுறத்தப்பட்டுள்ளது.

மேலும் காலை 9 மணி முதல் இரவு 1.30 மணிக்கு மேல் திரைப்படம் திரையிட்டாலோ மற்றும் அதிக கட்டணம் வசூல் செய்தாலோ திருவாரூர் உதவி கலெக்டர் (வருவாய் கோட்ட அலுவலர்) செல்போன் எண்: 9445000463 மற்றும் மன்னார்குடி உதவி கலெக்டர் செல்போன் எண்: 9445000464 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story