தொழில் தோழன்' இணையதளத்தில் 200 வகையான சேவைகளுக்கு அனுமதி பெறலாம்


தொழில் தோழன் இணையதளத்தில் 200 வகையான சேவைகளுக்கு அனுமதி பெறலாம்
x
தினத்தந்தி 14 July 2023 5:06 PM IST (Updated: 15 July 2023 3:54 PM IST)
t-max-icont-min-icon

குறு, சிறு தொழில்முனைவோர்கள் தொழில் தோழன் சேவை இணையதளத்தில் 40 துறைகளில் 200 வகையான சேவகளுக்கு அனுமதி பெறலாம் என 3 மாவட்டங்கள் பங்கேற்ற கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

குறு, சிறு தொழில்முனைவோர்கள் தொழில் தோழன் சேவை இணையதளத்தில் 40 துறைகளில் 200 வகையான சேவகளுக்கு அனுமதி பெறலாம் என 3 மாவட்டங்கள் பங்கேற்ற கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

கருத்தரங்கம்

குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றை சாளர இணையதளமான 'தொழில் தோழன்' இணையதளம் ெதாடங்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த இணையதள சேவை குறித்து வேலுர், ராணிப்பேட்டை, திருப்பத்துர் ஆகிய மாவட்டங்களுக்கான ஒருங்கிணைந்த கருத்தரங்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது :-

தமிழ்நாடு ஒற்றைச் சாளர இணையதளம் என்பது, முதலீட்டாளர்கள் வணிகம் தொடர்பான அனைத்து ஒப்புதல்கள், உரிமங்கள், அனுமதிகள், தடையில்லாச் சான்றிதழ்கள் ஆகியவற்றை குறிப்பிட்ட கால வரையறைக்குள் வெளிப்படையான மற்றும் சுலபமான முறையில் மின்னணு மூலம் பெற்றுக்கொள்ள உதவிடும் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட இணையதளம் ஆகும்.

இணையதள முகவரி

இந்த இணைய தளம் மூலம் 40-க்கும் மேற்பட்ட துறைகளைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட சேவைகள் அளிக்கப்படும். இதன் மூலம் வணிகம் புரிதலை எளிதாக்கப்படுவது மட்டுமின்றி, முதலீட்டாளர்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளுடன் நேரடித் தொடர்புகள் எதுமின்றி அனுமதிகள் வழங்கப்படுகிறது. இவ்வசதிகளை https://tnswp.com/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

இத்தளத்தில் நகர மற்றும் நாட்டு திட்டமிடல் இயக்குநரகம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், மின் ஆய்வுத் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை, தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம், தொழிலாளர் துறை, போன்ற பல்வேறு துறைகள் மூலம் தொழில் முனைவோருக்கு தேவையான ஒப்புதல்கள், உரிமங்கள், அனுமதிகள், தடையில்லாச் சான்றிதழ்கள்களை விரைவாக பெறலாம்.

226 விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி

ராணிப்பேட்டை மாவட்டம் புதியதாக பிரிக்கப்பட்ட பிறகு இந்த இணையதளம் மூலம் 249 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பல்வேறு வகையான 9 துறைகள் மூலம் 226 விண்ணப்பதரார்களுக்கு தேவையான ஒப்புதல்கள், உரிமங்கள், அனுமதிகள், தடையில்லாச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பேசினார்.

நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பாஸ்கரன், வழிகாட்டிகள் யாக்ஸ் தவார், கவுதம் தாஸ், வேலுர் மாவட்ட தொழில் மைய அலுவலர் குமார், ஜெம் ஆலோசகர் சபரீஷ், வால்மார்ட் விரித்தி நிறுவன அலுவலர் அஜித், ராணிப்பேட்டை மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் வசந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.


Next Story