ெகாள்முதல் நிலையத்தில் இருந்து நெல்லை எடுத்து அரிசியாக அரைத்து ஒப்படைக்கலாம்


ெகாள்முதல் நிலையத்தில் இருந்து நெல்லை எடுத்து அரிசியாக அரைத்து ஒப்படைக்கலாம்
x

ெகாள்முதல் நிலையத்தில் இருந்து நெல்லை எடுத்து அரிசியாக அரைத்து ஒப்படைக்கலாம் என்று தனியார் அரவை ஆலைகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப்பது பின்னர் அதை அரிசியாக அரைத்து மீண்டும் கிடங்குகளில் அரிசியினை ஒப்படைப்பது வரையிலான விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தில் இணையாத தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது.எனவே தனியார் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்..இது தொடர்பான கூடுதல் விவரங்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சிவகங்கை மண்டல மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Related Tags :
Next Story