மெட்ரோ ரெயிலில் நாளை 5 ரூபாய் கட்டணத்தில் பயணிக்கலாம் -மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன நாளை முன்னிட்டு கடந்த 3-ந்தேதி கியூ-ஆர் பயணச்சீட்டுகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு ரூ.5 என்ற பிரத்யேகக் கட்டணத்தில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன நாளை முன்னிட்டு கடந்த 3-ந்தேதி கியூ-ஆர் பயணச்சீட்டுகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு ரூ.5 என்ற பிரத்யேகக் கட்டணத்தில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 'மிக்ஜம்' புயல் மற்றும் கனமழை காரணமாக அன்றைய தினம் (3-ந்தேதி) மெட்ரோ பயணிகள் அதிகளவில் பயணிக்க இயலவில்லை. எனவே, மீண்டும் நாளை (17-ந்தேதி) மெட்ரோ பயணிகள் இந்த சலுகையை பயன்படுத்தி ரூ.5 என்ற பிரத்யேகக் கட்டணத்தில் பயணிக்கலாம்.
இந்த பிரத்யேகக் கட்டணம் நாளை ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும். மேலும், கியூ-ஆர் பயணச்சீட்டுகளுக்கு மட்டுமே இது பொருந்தும். மற்ற பயணச்சீட்டு முறைக்கு இந்த சலுகை பொருந்தாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story