திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை


திருமணமான 6 மாதத்தில் இளம்பெண்  தற்கொலை
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெரியநாயக்கன்பாளையம் அருகே தந்தை இறந்த துக்கம் தாங்காமல் திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசார ணைக்கு பயந்து கணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்

பெ.நா.பாளையம்

பெரியநாயக்கன்பாளையம் அருகே தந்தை இறந்த துக்கம் தாங்காமல் திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசார ணைக்கு பயந்து கணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-


6 மாதத்துக்கு முன்பு திருமணம்


கோவை அருகே நாயக்கன்பாளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகள் சங்கீதா (வயது 26). இவருக்கும், அன்னூர் ஆலங்குட்டையை சேர்ந்த கூலித் தொழிலாளி கனகராஜூக்கும் (27) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.

அவர்கள், முருகேசன் வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு முருகேசன் உயிரிழந்தார். இதனால் சங்கீதா எப்போதும் தனது தந்தையை நினைத்து அழுதுகொண்டே இருந்து உள்ளார்.

இதற்கிடையே கடந்த 13-ந் தேதி உயிரிழந்த முருகேசனுக்கு திதி கொடுப்பதற்காக உறவினர்கள் சென்றனர். அவர்களுடன் செல்லாமல் சங்கீதா வீட்டில் தனியாக இருந்தார்.


இளம்பெண் தற்கொலை


இதற்கிடையே கனகராஜ் மற்றும் உறவினர்கள் திதி கொடுத்து விட்டு வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டிற்குள் சங்கீதா தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கனகராஜ் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சங்கீதா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.


இதை அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். தற்கொலை செய்த சங்கீதா வுக்கு திருமணம் முடிந்து 6 மாதமே ஆவதால் அவருடைய சாவு குறித்து கோவை வடக்கு ஆர்.டி.ஓ. மற்றும் பெரியநாயக்கன் பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.


கணவரும் தூக்கில் தொங்கினார்


சங்கீதா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த கனக ராஜை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டைவிட்டு வெளியே சென்ற கனகராஜ் வீடு திரும்ப வில்லை. அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டபோதும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் உறவினர்கள் கனகராஜை தேடி வந்தனர்.


இந்த நிலையில் அன்னூர் அருகே குப்பனூர் ஆலங்குட்டை கரியன் தோட்டத்தில் உள்ள வேப்பமரத்தில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் அன்னூர் போலீசார் விரைந்து சென்று அந்த பிணத்தை கைப்பற்றினர்.விசாரணையில், பிணமாக தொங்கியவர் கனகராஜ் என்பதும், தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதால் போலீஸ் விசாரணைக்கு பயந்து அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story