திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் மர்ம சாவு


திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் மர்ம சாவு
x

செஞ்சி அருகே திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தாா்.

விழுப்புரம்

செஞ்சி:

செஞ்சி அருகே உள்ள அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மகள் சாந்தி(வயது 26). இவருக்கும், கீழ்பாப்பாம்பாடி கிராமத்தை சேர்ந்த வடமலை மகன் செல்வகுமார்(32) என்பவருக்கும் கடந்த 11.2.2022 அன்று திருமணம் நடந்தது. இருவரும் சென்னையில் குடும்பம் நடத்தி வந்தனர். செல்வகுமார், அங்குள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். செல்வகுமாரின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதன் பேரில் விவசாய வேலை செய்வதற்காக சாந்தி கீழ்பாப்பாம்பாடிக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு செல்வகுமாரின் வயலில் சாந்தி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து சாந்தியின் தம்பி சீதாராமன் செஞ்சி போலீசில் புகார் கொடுத்தார். அதில், செல்வகுமார் மற்றும் அவரது உறவினர்கள் வரதட்சணை கேட்டு சாந்தியை கொடுமைப்படுத்தினர். விவசாய வேலை செய்யுமாறு துன்புறுத்தி உள்ளனர். எனவே சாந்தியின் சாவில் சந்தேகம் இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் செல்வகுமார், இவரது தந்தை வடமலை, தாய் கம்சலா உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story