இளம் பெண் மாயம்


இளம் பெண் மாயம்
x

மாயமான இளம் பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள தட்டான்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ்(வயது 25). இவரது மனைவி காமாட்சி(22). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் கடந்த 12-ந் தேதி குடும்ப பிரச்சினை சம்பந்தமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த காமாட்சியின் தந்தை நாகரெத்தினம் தனது மகளை சொந்த ஊரான வாணத்திரையான்பட்டினம் கிராமத்திற்கு அழைத்து வந்து விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற காமாட்சி மீண்டும் வீடு திரும்பவில்லை. பின்னர் அவர் எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான காமாட்சியை தேடி வருகின்றனர்.


Next Story