மொபட்டில் இருந்து நிலை தடுமாறி விழுந்தபோது ஆம்னி பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு


மொபட்டில் இருந்து நிலை தடுமாறி விழுந்தபோது ஆம்னி பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு
x

மொபட்டில் இருந்து நிலை தடுமாறி விழுந்தபோது ஆம்னி பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சென்னை

பூந்தமல்லி கீழ்மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜம்பு. இவருடைய மகன் அஸ்வின் (வயது 25). புகைப்பட கலைஞர். இவர், நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு 100 அடி சாலையில் அரும்பாக்கம் அருகே மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது பின்னால் வந்த ஆம்னி பஸ் சாலையில் விழுந்து கிடந்த அஸ்வின் தலை மீது ஏறி இறங்கியது. பஸ் சக்கரத்தில் சிக்கிய அஸ்வின், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்னி பஸ் டிரைவர் கார்த்திக் (30) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story