வாலிபர் அடித்துக்கொலை


வாலிபர் அடித்துக்கொலை
x

கும்பகோணத்தில், சிகரெட் சாம்பல் கண்ணில் பட்டதை தட்டிக்கேட்ட வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:-

கும்பகோணத்தில், சிகரெட் சாம்பல் கண்ணில் பட்டதை தட்டிக்கேட்ட வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சிகரெட் சாம்பல் கண்ணில் பட்டது

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கொட்டையூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் பிரகாஷ்(வயது 22). இவர் நேற்று முனதினம் தனது நண்பர் சந்தோஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வளையப்பேட்டை வழியாக சென்று கொண்டிருந்தார்.அப்போது இவர்களுக்கு முன்னால் சிகரெட்டை புகைத்தபடி ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவரது சிகரெட்டின் சாம்பல், பின்னால் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த பிரகாஷ் நண்பர் சந்தோஷ் கண்ணில் பட்டதாக கூறப்படுகிறது.

தட்டிக்கேட்டனர்

இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் மற்றும் சந்தோஷ் இருவரும் முன்னால் சென்று கொண்டிருந்த நபரை வழிமறித்து நிறுத்தி தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது பிரகாஷ் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் சேர்ந்து புகை பிடித்த நபரை தாக்கியுள்ளனர். அடிவாங்கிய நபர் செல்போன் மூலம் தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அடித்துக்கொலை

தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த புகைபிடித்த நபரின் நண்பர்கள் அங்கு வந்து பிரகாஷ் மற்றும் சந்தோஷை சரமாரி தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் தாலுகா போலீசில் சந்தோஷ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புகைப்பிடித்து சென்ற அந்த நபர் யார்? பிரகாஷ் மற்றும் சந்தோஷை தாக்கியவர்கள் யார்? இந்த சம்பவத்தில் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளனர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிகரெட் சாம்பல் கண்ணில் பட்டதை தட்டிக்கேட்டதற்காக வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story