டிரைவர், கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது


டிரைவர், கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 Dec 2022 6:45 PM GMT (Updated: 2 Dec 2022 6:46 PM GMT)

நடுரோட்டில் அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர், கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது சின்னசேலம் அருகே பரபரப்பு

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

சின்னசேலம் அருகே கனியாமூர் குத்தகைகாடு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 51). அரசு பஸ் டிரைவரான இவர் சம்பவத்தன்று சின்னசேலத்தில் இருந்து ஈரியூர்க்கு பஸ்சை ஓட்டிச்சென்றார். ஈசாந்தை, நாட்டார்மங்கலம் கிராமங்களுக்கிடையே உள்ள பூவாயி அம்மன் கோவில் அருகே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வந்த வாலிபர் பஸ்சை வழிமறித்து டிரைவர் மற்றும் கண்டக்டர் ஸ்ரீதர் ஆகியோரை திட்டி தாக்கி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ வழக்குப்பதிவு செய்து டிரைவர், கண்டக்டரை தாக்கியதாக சின்னசேலத்தை சேர்ந்த பழனிசாமி மகன் முத்துகிருஷ்ணன்(34) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story