முதியவரை தாக்கிய வாலிபர் கைது


முதியவரை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வளவனூர் அருகே முதியவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

வளவனூர்,

வளவனூர் அருகே குமாரகுப்பம் நாராயணநகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி என்கிற பழனி (வயது 60). இவர் இளங்காட்டிலுள்ள தனது நிலத்திற்கு தண்ணீர்பாய்ச்ச சென்றார். அப்போது வளவனூர் இளங்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கலைமதி (34) என்பவர் கிருஷ்ணசாமியை திடீரென திட்டி தாக்கியுள்ளார். இது குறித்து கிருஷ்ணசாமியின் மகன் குமாரவடிவேலு (44) கொடுத்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைமதியை கைது செய்தனர். கலைமதி மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story