பெண்ணை தாக்கிய வாலிபர் கைது


பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
x

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே முணியத்தரியான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி வசந்தி(வயது 38). கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் குமார் (44) என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் வசந்தியை குமார் தகாத வார்த்தைகளால் திட்டி, கட்டையால் வீட்டை சேதப்படுத்தி, வசந்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வசந்தி உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு குமாரை செய்து கைது செய்தனர்.


Next Story