பெண்ணை தாக்கிய வாலிபர் கைது


பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
x

மீன் வாங்கியதற்கு பணம் கேட்டதால் பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

நாகை சாமந்தான்பேட்டை அமிர்தா நகரை சேர்ந்த வைத்திலிங்கம் மனைவி செல்லபாப்பா. இவர் கீழ்வேளூர் அருகே உள்ள பட்டமங்கலம் பகுதியில் கூடையில் வைத்து மீன் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் செல்லபாப்பா பட்டமங்கலம் பகுதியில் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பட்டமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த அண்ணாதுரை மகன் தினேஷ் (வயது 33) என்பவர் மீன்வாங்கி உள்ளார். இதற்கு அவரிடம், செல்லபாப்பா பணம் கேட்டுள்ளார். அதற்கு தினேஷ் தான் வாங்கிய மீனுக்கு பணம் தர மறுத்து செல்லபாப்பாவை கீழே தள்ளி விட்டு சரமாரியாக தாக்கி உள்ளார். இதுகுறித்து அவர் கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story