பெண்ணை தாக்கிய வாலிபர் கைது


பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
x

பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே செட்டித்திருக்கோணம் தெற்கு தெருவைச் சேர்ந்த பழனிச்சாமி மகள் ஷர்ஜினா (வயது 20). இவர் நேற்று அஸ்தினாபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அஸ்தினாபுரம் பரமசிவம் மகன் விக்னேஷ் (27). 4 வருடங்களாக காதலித்து வருவதாக கூறி ஷர்ஜினாவை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ஷர்ஜினா அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கயர்லாபாத் போலீஸ் ஸ்டேஷனில் ஷர்ஜினா கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் வழக்கு பதிந்து விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story