வீட்டின் பூட்டை உடைத்து 4½ பவுன் நகைகள் திருடிய வாலிபர் கைது
கரூர் அருேக வீட்டின் பூட்டை உடைத்து 4½ பவுன் நகைகள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
4 பவுன் நகைகள் திருட்டு
கரூர் அருகே உள்ள வெள்ளப்பட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் முருகன் மனைவி ஜெயந்தி (வயது 49). இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி வீட்டினுள் சென்று பார்த்தார்.
அப்போது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் வீட்டினுள் அலமாரியில் அவர் வைத்திருந்த 4½ பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயந்தி பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
வாலிபர் கைது
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டிற்குள் சென்று நகைகளை திருடியது நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூரை சேர்ந்த அபூபக்கர் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.