நண்பரை கூர்மையான ஆயுதத்தால் வெட்டிய வாலிபர் கைது


நண்பரை கூர்மையான ஆயுதத்தால் வெட்டிய வாலிபர் கைது
x

நண்பரை கூர்மையான ஆயுதத்தால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

மலைக்கோட்டை,ஆக.30-

திருச்சி கோட்டை பகுதியில் உள்ள இ.பி.ரோடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் வெற்றிதாசன் (வயது 30). இவர் நேற்று மாலை திருச்சி இ.பி.ரோடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த நண்பர் அஜித்குமார் (24) என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். இருவரும் மதுபோதையில் இருந்ததால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, வெற்றி தாசன் அஜித்தின் சகோதரியை பற்றி தவறாக பேசினாராம். இதனால் ஆத்திரம் அடைந்த அஜித் பிளேடு போன்ற கூர்மையான ஆயுதத்தால் வெற்றி தாசனின் கழுத்து பகுதியில் ெவட்டினாராம். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.


Next Story