கத்திமுனையில் லாரி டிரைவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது


கத்திமுனையில் லாரி டிரைவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது
x

பொன்னேரி அருகே கத்திமுனையில் லாரி டிரைவரிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் இப்ரான் (வயது 30). லாரி டிரைவர். இவர் மீன் வளர்ப்பு குஞ்சுகளை ஏற்றிக்கொண்டு பொன்னேரி அருகே உள்ள குன்னமஞ்சேரி அருகே அதிகாலையில் வந்த போது மர்ம நபர்கள் 2 பேர் லாரியை மடக்கி நிறுத்தினர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி இப்ரானிடமிருந்து ரூ.6 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணு (22) என்பவரை கைது செய்தனர்.

அதேபோல், திருவள்ளூரை அடுத்த மொண்ணவேடு, இறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஸ் (30). இவர் நேற்று முன்தினம் திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியின் முன்புறம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவள்ளூரை அடுத்த மெய்யூர் மேட்டு காலனியை சேர்ந்த கணபதி என்கின்ற சிவா (20) என்பவரை கைது செய்தனர்.


Next Story