சாராயம் பதுக்கிய வாலிபர் கைது
பிரம்மதேசம் அருகே சாராயம் பதுக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்
பிரம்மதேசம்,
பிரம்மதேசம் அருகே உள்ள குன்னப்பாக்கம் கிராமத்தில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் குன்னப்பாக்கம் கிராமத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மேகநாதன்(வயது 38) என்பவரின் வீ்ட்டில் சோதனை செய்தபோது வீ்ட்டின் பின்புறம் 10 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து மேகநாதனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story