நாய்களை வைத்து பாம்புகளை வேட்டையாடிய வாலிபர் கைது


நாய்களை வைத்து பாம்புகளை வேட்டையாடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 April 2023 6:45 PM GMT (Updated: 25 April 2023 6:47 PM GMT)

வேதாரண்யம் அருகே நாய்களை வைத்து பாம்புகளை வேட்டையாடிய வாலிபர் கைது

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா, மூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகன்ஆனந்த் (வயது 27). விவசாயியான இவர் சிப்பிபாறை நாய்களை வளர்த்து குட்டிகளை விற்பனை செய்து வருகிறார். மேலும் தான் வைத்திருந்த நாய்களை வைத்து மூலக்கரை கிராம வயல்வெளியில் உள்ள பாம்புகளை வேட்டையாடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக தகவல் அறிந்து வேதாரண்யம் வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில், வனவர் பெரியசாமி, சதீஷ்குமார், வனக்காவலர் நாகூரான் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆனந்த் மற்றும் அவர் வைத்திருந்த 2 நாய்களையும் கோடியக்கரை வனசரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து இந்திய வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.


Next Story