ஊராட்சி மன்ற தலைவியை மானபங்கப்படுத்திய வாலிபர் கைது


ஊராட்சி மன்ற தலைவியை மானபங்கப்படுத்திய வாலிபர் கைது
x

கம்மாபுரம் அருகே ஊராட்சி மன்ற தலைவியை மானபங்கப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

கம்மாபுரம்,

கம்மாபுரம் அருகே உள்ள பெருந்துறை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி லதா(வயது 40). ஊராட்சி மன்ற தலைவியான இவர், வேலையாட்களுக்கு கூலி கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் ஆனந்தராஜ்(24) என்பவர் மதுபோதையில் அங்கு வந்து ஆபாசமாக திட்டி ஊராட்சி மன்ற தலைவியை மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து லதா கொடுத்த புகாரின் பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்தனர்.


Next Story