சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது


சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
x

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து திருமணத்துக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயை கைது செய்தார். மேலும் தலைமறைவாக இருந்த சிறுமியையும், அவரது கணவர் சக்திவேலுவையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் பெரம்பலூர் புது பஸ் நிலையம் அருகே பதுங்கி இருந்த சக்திவேலை இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தார்.


Next Story