வீட்டில் விபசாரம் நடத்திய வாலிபர் கைது


வீட்டில் விபசாரம் நடத்திய வாலிபர் கைது
x

வீட்டில் விபசாரம் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

திருச்சி மாவட்டம், நெடுங்கூர் மேற்கு தெருவை சேர்ந்த போஜன் மகன் மனோகரன்(வயது 33). இவர் நேற்று மதியம் பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டு அந்த வழியாக செல்லும் ஆண்களிடம் நைசாக பேசி தன்னிடம் அழகான பெண்கள் இருப்பதாகவும், அவர்களில் உங்களுக்கு தேவையான பெண்ணிடம் குறைந்த செலவில் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறி, பெரம்பலூர்-துறையூர் சாலையில் செஞ்சேரி செல்லியம்மன் நகரில் ஒரு வீட்டில் 3 பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்துள்ளார். இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மனோகரனை கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட 3 பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


Next Story