வீட்டில் வைத்து மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது
கச்சிராயப்பாளையம் அருகே வீட்டில் வைத்து மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது
கள்ளக்குறிச்சி
கச்சிராயப்பாளையம்
கச்சிராயப்பாளையம் அருகே குதிரைசந்தல் கிராமத்தை சேர்ந்த சரவணன் மகன் மணிவாசகம் என்பவர் அவரது வீட்டில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் தனி பிரிவு ஏட்டு விஜய் ஆகியோர் மணிவாசகம் வீட்டுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து மணிவாசகத்தை கைது செய்து செய்த போலீசார் அவரிடம் இருந்து 50 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story