சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது


சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது
x

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர் தாலுகா கொளத்தூர் அருகில் உள்ள கரிக்கலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 29), திருமணமானவர்.

இவர் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும், இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story