பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது


பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது
x

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

திருச்சியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில், திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள டீக்கடை ஒன்றில் கேஷியராக பணிபுரியும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன்(வயது 21), அந்த மாணவியை அழைத்து சென்றது தெரியவந்தது. இதனை தொடாந்து அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்று விசாரணை நடத்தியதில், மணப்பாறை அயன்புரம் பகுதியில் பள்ளி மாணவியுடன் மகேந்திரன் தங்கி இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மகேந்திரனை பிடித்து அழைத்து வந்தனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் கண்டோன்மெண்ட் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகேந்திரனை கைது செய்தனர்.


Next Story