475 மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது
காரைக்காலில் இருந்து நாகைக்கு 475 மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது
நாகை, வெளிப்பாளையம், செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பைகளை சோதனை செய்தனர். சோதனையில் 90 மில்லி அளவு கொண்ட 475 புதுச்சேரி மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து காரைக்காலில் இருந்து புதுச்சேரி மதுபாட்டில்களை மோட்டார் சைக்கிளில் நாகைக்கு கடத்தி வந்த வெளிப்பாளையம் தாமரைக்குளம் தென்கரையை சேர்ந்த கொடிவீரன் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தி வரப்பட்ட 475 மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதைதொடர்ந்து வெளிப்பாளைம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொடிவீரனை கைது செய்தனர்.