மூதாட்டியிடம் 20 பவுன் சங்கிலி பறித்த வாலிபர் கைது


மூதாட்டியிடம் 20 பவுன் சங்கிலி பறித்த வாலிபர் கைது
x

மூதாட்டியிடம் 20 பவுன் சங்கிலி பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் வேலுச்சாமிபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி கலாவதி (வயது 62). இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த கரூர், அம்மன்நகரை சேர்ந்த சந்திரசேகர் (34) என்பவர் கலாவதியிடம் வீடு வாடகைக்கு கேட்பதுபோல் பேச்சு கொடுத்தார். அப்போது, கலாவதி கழுத்தில் அணிந்திருந்த 20 பவுன் சங்கிலியை சந்திரசேகர் பறித்து கொண்டு தப்பி சென்றார்.

இதுகுறித்து கலாவதி கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து, தப்பி சென்ற சந்திரசேகரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்த 20 பவுன் சங்கிலியும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story