ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது


ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
x

ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள கட்டைமேடு பகுதியை சேர்ந்தவர்கள் ராம்கி (வயது 34), பாரத் (35). இருவரும் ஆட்டோ டிரைவர்கள். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்தநிலையில் இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராம்கி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாரத்தை குத்தியுள்ளார்.

இதில் மார்பில் கத்திக் குத்து விழுந்த பாரத்தை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் பாரத் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்கியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story