கோவையில் 22 இருசக்கர வாகனங்களை திருடிய வாலிபர் கைது
கோவை அரசு ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு இடங்களில் 22 இருசக்கர வாகனங்களை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவை
கோவை அரசு ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு இடங்களில் 22 இருசக்கர வாகனங்களை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
இருசக்கர வாகனங்கள் திருட்டு
கோவை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளை அழைத்துவருபவர்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றால் அடிக்கடி திருட்டு போனது. இதுதொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசில் பலரும் புகார் செய்தனர். இதேபோல அரசு கலைக்கல்லூரி சாலை, ஆர்.எஸ்.புரம் உள்பட நகரின் பல பகுதிகளிலும் மொபட், ஸ்கூட்டர்கள் திருட்டு போனது.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
வாலிபர் கைது
இந்த நிலையில் கோவை உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 30) என்பவர் இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து ராஜேசிடம் நடத்திய விசாரணையில் 22 இருசக்கர வாகனங்களை திருடியதாக கூறினார். அவர் கொடுத்த தகவலின்பேரில் இந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர் இருசக்கர வாகனங்களை திருடி,குறைந்த விலைக்கு விற்றது தெரியவந்தது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் 19 இருசக்கர வாகனங்களையும், ஆர்.எஸ்.புரம் பகுதியில் 3 இருசக்கர வாகனங்களையும் திருடியதாக ராஜேஷ் கூறினார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் சிறையில் அடைத்தனர்.