ஆட்டோ, பெட்ரோல் திருடிய வாலிபர் கைது


ஆட்டோ, பெட்ரோல் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:47 PM GMT)

சின்னசேலம் அருகே ஆட்டோ, பெட்ரோல் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்:

சின்னசேலம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். வி.கூட்டுரோடு ராயப்பனூரில் உள்ள அரசு டாஸ்மாக் கடை முன்பு ஆட்டோவுடன் நின்றிருந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரத்தை சேர்ந்த சின்னத்தம்பி மகன் பாரத் (வயது 27) என்பதும், ஆத்தூர் பகுதியில் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த ஆட்டோவை திருடிக்கொண்டு சின்னசேலத்துக்கு வந்ததும், கூட்ரோடு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பிளாஸ்டிக் கேன்களில் நிரப்பி வைத்திருந்த 20 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து பாரத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ஆட்டோ, பெட்ரோல், டீசல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story
  • chat