சின்னசேலம் அருகே சொட்டுநீர் பாசன குழாய் திருடிய வாலிபர் கைது
சின்னசேலம் அருகே சொட்டுநீர் பாசன குழாய் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி
சின்னசேலம்,
சின்னசேலம் கீழ்குப்பம் போலீசார் நயினார்பாளையம் நான்குமுனை சந்திப்பு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் வருவதை பார்த்த வாலிபர் ஒருவர், அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தென்செட்டியந்தல் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(வயது 25) என்பதும், வி.மாமாந்தூரை சேர்ந்த விவசாயி மணி என்பவருடைய வயலில் இருந்த சொட்டு நீர் பாசன பிளாஸ்டிக் குழாய் மற்றும் அதேஊரை சேர்ந்த கலியமூர்த்தி வயலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா ஒயர்கள், அதற்கான உபகரணங்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், வெங்கடேசனை கைது செய்தனா்.
Related Tags :
Next Story