சின்னசேலம் அருகேஆடு திருடிய வாலிபர் கைது
சின்னசேலம் அருகே ஆடு திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
சின்னசேலம்,
கள்ளக்குறிச்சி அடுத்த பொற்படாக்குறிச்சி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 68). இவர் சின்னசேலம் அடுத்த எரவார், வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரது நிலத்தை குத்தகைக்கு பேசி பயிர் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நடராஜன் தான் வளர்த்து வரும் ஆடு ஒன்றை நிலத்தில் கட்டிவிட்டு, அருகே உள்ள நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார்.
அப்போது, ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு பார்த்தபோது, சாக்கு பையில் ஆட்டை திருடி எடுத்துகொண்டு மோட்டார் சைக்கிளில் ஒருவர் வேகமாக செல்ல முயன்றார்.
அவரை நடராஜன் மடக்கிபிடித்து, சின்னசேலம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் பிடிபட்டவர் கள்ளக்குறிச்சி அருகே முடியனூர் மேற்கு தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் மணிகண்டன் (33) என தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனசேகர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார்.