மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
பொள்ளாச்சி
பொள்ளாச்சியை சேர்ந்தவர் விஸ்வநாதன்(வயது 40). இவர் தனது மோட்டார் சைக்கிளை மார்க்கெட் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் நல்லூர் கைகாட்டியில் போலீசார் வாகன சோதனை நடத்தியபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், டி.நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்த பிரபாகரன்(22) என்பதும், விஸ்வநாதனின் மோட்டார் சைக்கிளை திருடியவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர், பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, செல்லமுத்து நகர் பகுதியிலும் மோட்டார் சைக்கிள்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.