மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அருகே சிறுகுன்றா எஸ்டேட்டை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கடந்த 4-ந் தேதி வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு துணிக்கடைக்கு முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து வால்பாறை போலீசில் விக்னேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வால்பாறை-சோலையாறு அணை சாலையில் ஸ்டேன்மோர் கரும்பாலம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சோலையாறு எஸ்டேட் 3-வது பிரிவு பகுதியை சேர்ந்த முனுசாமி(26) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் ஓட்டி வந்தது விக்னேஷிடம் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. உடனே மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், முனுசாமியை கைது செய்தனர்.


Next Story