மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள கீழச்சேரி ஜார்ஜ் தெருவை சேர்ந்தவர் அந்தோணி ரேகன் (வயது 42). இவர் கடந்த 2-ந்தேதியன்று இரவு தனனுடைய வீட்டின் வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். 3-ந்தேதி காலை எழுந்து பார்த்தபோது இவரது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடியும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் மப்பேடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியது சத்தரை கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 18) என்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றி இது சம்பந்தமாக மேலும் விசாரித்து வருகின்றனர்.