கோவில் பணத்தை திருடிய வாலிபர் கைது


கோவில் பணத்தை திருடிய வாலிபர் கைது
x

பாளையங்கோட்டையில் கோவில் பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை அன்னை இந்திராநகரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 57). இவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கோவிலின் நிர்வாகியாகவும் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தச்சநல்லூர் சேந்திமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் இசக்கிராஜா (21) என்பவர் கோவிலில் வேலைக்கு சோ்ந்து நடராஜனுக்கு உதவியாக இருந்தார்.

இந்தநிலையில் நடராஜன் கோவிலில் வைத்து இருந்த ரூ.25 ஆயிரத்தை இசக்கிராஜா திருடி சென்றதாக அரசு ஆஸ்பத்திரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இசக்கிராஜாவை கைது செய்தனர்.


Next Story