பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது


பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
x

பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள கீழமுன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் பகவதிராஜா (வயது 25). இவர் ஒரு பெண்ணை கிண்டல் செய்தார். இதை அந்த பெண் கண்டித்துள்ளார். இதனை மனதில் வைத்துக் கொண்டு சம்பவத்தன்று அந்த பெண் முன்னீர்பள்ளம் செல்லாயி அம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த பகவதிராஜா அந்த பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பகவதிராஜாவை நேற்று கைது செய்தார்.

1 More update

Related Tags :
Next Story