குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

போதை காளான் விற்ற வழக்கில் தொடர்புடைய வாலிபர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் என்ற பான்ட்ஸ் (வயது 32). கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர், கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான் விற்பனை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் போதை காளான் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர் மீது போதை காளான் விற்பனை செய்ததாக ஏற்கனவே 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து இவர், குற்றச்செயலில் ஈடுபட்டதால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கலெக்டரிடம் பரிந்துரை செய்தார். இதனையடுத்து நாகராஜை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார். அதன்பேரில் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். கொடைக்கானலில் போதை காளான் விற்பனை செய்தவர் மீது முதல் முறையாக குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story