குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

சேரன்மாதேவியில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி சந்தனமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கெங்காமணி என்பவருடைய மகன் ராஜேஷ் (வயது 24). இவர் அடிதடி, கொலை முயற்சி வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வெளியே வந்த அவர், அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சேரன்மாதேவி போலீசாருக்கு புகார் வந்தது.

இதையடுத்து அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு, இன்ஸ்பெக்டர் சேக் அப்துல் காதர் வேண்டுகோள் விடுத்தார். பின்னர் இதுபற்றி மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் பரிந்துரைத்தார். இதனை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று ராஜேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் போலீசார் ராஜேசை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.


Next Story