18 கிலோ கடல்அட்டைகளுடன் வாலிபர் கைது


18 கிலோ கடல்அட்டைகளுடன் வாலிபர் கைது
x

18 கிலோ கடல் அட்டைகளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

ராமநாதபுரம் வனச்சரக பணியாளர்கள் தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை மடக்கி சோதனையிட்டபோது அவர் வைத்திருந்த நீலநிற கேனில் 18 கிலோ கடல் அட்டைகள் இருந்தது தெரிந்தது.

அதனை மோட்டார் சைக்கிளுடன் கைப்பற்றிய வனத்துறையினர் இதுதொடர்பாக தேவிபட்டினம் அபிபுல்லா மகன் முபாரக்கனி (வயது37) என்பவரை கைது செய்து ராமநாதபுரம் கொண்டு வந்தனர். ராமநாதபுரம் வனச்சரக அலுவலகத்தில் முபாரக்கனியிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


Related Tags :
Next Story