உளுந்தூர்பேட்டை அருகே நாட்டு துப்பாக்கியுடன் வாலிபர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே நாட்டு துப்பாக்கியுடன் வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒடப்பன்குப்பம் பகுதியில் திருநாவலூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு நாட்டுத் துப்பாக்கியுடன் வாலிபர் ஒருவர் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அந்தநபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர், அதேபகுதியை சேர்ந்த அழகேசன் (வயது 34) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கியை அழகேசன் பதுக்கி வைத்திருந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story