கழிவுநீர் கால்வாயில் வாலிபா் பிணம்


கழிவுநீர் கால்வாயில் வாலிபா் பிணம்
x

கூத்தாநல்லூர் அருகே கழிவுநீர் கால்வாயில் வாலிபா் பிணமாக கிடந்தார். அவா் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே கழிவுநீர் கால்வாயில் வாலிபா் பிணமாக கிடந்தார். அவா் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆண்பிணம்

கூத்தாநல்லூர் அருகே, லெட்சுமாங்குடி மாதா கோவில் பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாயில் உடல் அழுகிய நிலையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார்.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் கூத்தாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணை

விசாரணையில் இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த வாலிபர் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவர் சாவில் வேறு மர்மம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story